குணங்களை மாற்றிக்கொள்ள முடியுமா ?
هل يستطيع الإنسان أن يغير أخلاقه؟
மௌலவி எம். வை. மஸிய்யா B. A.(Hons)
மனிதன் தனது குணங்களை மற்றிக் கொள்ள முடியுமா? முடியாதா? என்பது இன்று அதிகமானவர்களிடம் காணப்படுகின்ற மிக முக்கியமான கேள்விகளில் ஒன்றாகும். இதற்கு விடையளிப்பதில் அறிஞர்கள் மத்தியில் இரு வேறுபட்ட கருத்துக்கள் தென்படுகின்றன. அவை வருமாறு:
1.மனிதனால் தனது குணங்களை மாற்றிக் கொள்ள மடியாது ஏனெனில், அவை மனிதனிடம் நிரந்தரமானவை; அவை மனித இயல்புகளாகவே கருதப்படுகின்றன; அவற்றை மனிதன் தானாக மாற்றிக் கொள்ளவோ, அவற்றிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவோ முடியாது என்பர் சில அறிஞர்கள்.
2.மனிதன் தனது குணங்களை மாற்றிக் கொள்ளலாம். அது அவனால் முடியாத, அசாத்த்தியமான விடயமன்று என்பர் அதிகமான அறிஞர்கள் இவ்விரு கருத்துக்களிலும், இரண்டாவது கருத்தே சரியானதாகும்.
பொதுவாக குணங்கள் இரு வகைப்படுகின்றன. அவை
அ. மனிதனுடைய இயல்பிலேயே குடிகொண்டுள்ள குணங்கள்.
ஆ.மனிதன் தனது முயற்சி, பழக்க வழக்கங்கள், போன்றவற்றின் அடிப்படையில் தேடி அடைந்து கொள்ளும் குணங்கள்.