சனி, 3 அக்டோபர், 2009

குர்ஆனில் பேசும் எறும்புகள்



அஹமது பாகவி


நபி சுலைமானிடம் பேசிய எறும்பு 27:16-19  (نملة سليمان)
حَتَّى إِذَا أَتَوْا عَلَى وَادِي النَّمْلِ قَالَتْ نَمْلَةٌ يَا أَيُّهَا النَّمْلُ ادْخُلُوا مَسَاكِنَكُمْ لَا يَحْطِمَنَّكُمْ سُلَيْمَانُ وَجُنُودُهُ وَهُمْ لَا يَشْعُرُونَ


இறுதியாக அவர்கள் (எறும்புகள் நிறைந்த) எறும்புப் புற்றின் அருகே வந்தபோதுஇ 'எறும்புகளே! உங்கள் குடியிருப்புக்களுக்குள் நுழையுங்கள்! சுலைமானும் அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக்கூடாது என்று ஓரு எறும்பு கூறியது. (அல்குர்ஆன்:27:18)


فَتَبَسَّمَ ضَاحِكًا مِّن قَوْلِهَا


அது சொல்வதைக் கேட்டு சுலைமான் புன்னகை சிந்தி சிரித்தார் (அல்குர்ஆன்: 27:19) என்று அருள்மறை கூறுகிறது.


எறும்பு பேசியது:-


அல்லாஹ்வின் அற்புத மறையாம் அல் குர்ஆன் 'எறும்புகள் பேசியதாகவும்இஅது கேட்டு பறவைகள்இ உயிரினங்களின் மொழிகளைத் தெரிந்த இறைதூதர் சுலைமான்(அலை) அவர்கள் சிரித்ததாகவும்' இங்கே கூறப்படுகிறது.


அல்லாஹ் தனது படைப்புகளில் அற்பமான எறும்புகள்; பேசியதையும் அதற்கொரு முக்கியத்துவம் அளித்தும் தனது வேதத்திருமறை யில் குறிப்பிடுவதாயின் அந்த அரிய படைப்பில் நிச்சயம் பல அதிசயங்கள் அமைந்திருக்கும் என ஆய்வு செய்தபோது நமக்குத் தெரியாத பல உண்மைகள் தெரியவருகின்றன. இப்போது நாம் அதுபற்றி விரிவாகக் காண்போம்.


எறும்பும் அதன் வகைகளும்


எறும்பு ஒருகுழுவாக வாழும் ஒரு பூச்சியனமாகும். அது உலகின் எல்லாப் பகுதிகளிலும் பரவலாகக் காணப்படுகிறது. அண்மையில் இதுபற்றி ஆய்வு செய்த அறிவியலார் 'உலகில் 11,880 வகையான எறும்பினங்கள் உள்ளதாகக் கண்டு பிடித்துள்ளனர். அமெரிக்க விஞ்ஞானி ஒருவர் இவை 90,00க்கும் மேலிருக்கும் எனக்கூறுகிறார்.இவற்றில் பெரும்பாலானவை வெப்பமுள்ள நாடுகளில் தான் வாழ்கின்றன.



பாதை மாறாது திரும்பும் அதிசயம்


நாம் ஒரு பதிய ஊருக்கோ நாட்டிற்கோ செல்லும் போது பாதைகளையும் இடங்களையும் தெரிந்து கொள்ள வரைபடமோ வழிகாட்டியோ தேவப்படுகிறது.


அது போல இரை தேடச் செல்லும் உயிரினங்கள் பலமைல் தூரம் சென்று விட்டு தமது வசிப்பிடங்களுக்கு எப்படி திரும்பி வந்து சேருகின்றன என்பதை ஆராயும் போது நமக்கெல்லாம் வியப்பாக உள்ளன.ஒவ்வொரு உயிரினங்களுக்கும் ஒவ்வொரு புதுமையான ஏற்பாட்டையும் அறிவையும் அதனுள் அதைப் படைத்த நாயன் அமைத்துள்ளான். இங்கே அவன் எறும்புக்கு என்ன ஏற்பாட்டைச் செய்துள்ளான் எனபதைப் பார்ப்போம்.


துனீசியா நாட்டின் மத்திய தரைக் கடல் பகுதியில் வாழும் ஒருவகை கறுப்பு இன எறும்புகள் (Black Aunts)  பாலைவனத்தில் கூடுகள் அமைத்து வாழந்து வருகின்றன.


காலையில் சூரியன் உதயமாகி சிறிது நேரத்திற்கெல்லாம் வெப்பநிலை எழுபது டிகிரி சென்டி கிரேடு வரை உயரும் அந்த வெப்பநிலையில் உள்ள பகல் வேளையில் தனக்குத் தேவையான இரையைத்தேடி வீட்டைவிட்டு வெளியேறுகிறது.


அடிக்கடி நின்றும் திரும்பியும் வேகமாக ஊர்ந்து செல்லும் எறும்பு தனது கூட்டிலிருந்து 200 மீட்டர் (655 அடி) பரப்பளவுக்கு வளைந்தும் நெளிந்தும் ஊர்ந்து வெகுதூரம் வரை சென்று விடுகின்;றன. பாதைகளை அறிவதற்கு அடையாளமாக அங்கே ஆறுஇகுளம்இகுட்டைஇஏரிஇமரம்இகட்டடம் என எதுவுமே இல்லை. அது தேடிய பருப்பொருட்களை சுமந்து கொண்டு என எந்தவகை அடையாளங்களும் இல்லாத பாலைவனத்தில் எப்படி துல்லியமாக தன் வசிப்பிடத்தைக் கண்டுபிடித்து வருகிறது என்பது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.


எறும்புகளின் நீளம் உயரம் பருமன் எடை இவைகளை கருத்தில் கொண்டு அவைகள் பயணிக்கும் தூரத்தை கணக்கிட்டு மனித ஆற்றலோடு ஒப்பிடும்; போது அதே பாலைவனத்தில் 35 முதல் 40 கிலோ மீட்டர் தூரம் வரை ஒரு மனிதன் பயணிப்பதற்கு சமமாகும். மனிதனால் நடைமுறையில் சாத்தியமே இல்லாத இந்த அற்புதச் செயலை சாதாரண எறும்புகள் வெற்றிகரமாக செய்து முடிக்கின்றனவே! இது எப்படி ? என சிந்திதாலே தலை சுற்றுகிறது.



கண்களில் திசைகாட்டும் கருவி


அல்லாஹ் எறும்புகளுக்கு வழங்கியிருக்கும் தனிப்பட்ட உடலமைப்பே இந்த அரிய செயல்களுக்குக் காரணமாகும். எறும்புகளின் கண்களில் பிரத்தியேகமாக திசையை அறியக்கூடிய அற்புதமான ஒரு கருவியை இறைவன் பொருத்தியிருக்கிறான்.


அல்லாஹ்வினால் வழங்கப்பட்டுள்ள இந்த ஆற்றல் மனிதனால் கண்டு பிடிக்கப்பட்ட திசைகாட்டும் கருவியைவிட பன்மடங்கு ஆற்றல் வாய்ந்தது. இந்த சிறப்புமிகு அம்சத்தால் மனிதனால் உணரமுடியாத ஒருவகை கதிர்களை எறும்புகள் உணர்கின்றன. இந்த உணரும் கதிர்களால் வடக்கு தெற்கு என திசைகளை சரியாக அறிந்து கொள்கின்றன. இவ்வாறு திசைகளை அறியும் எறும்புகள் தங்களது கூடுகளையும் தவறாமல் அடையாளம் கண்டு கொள்கின்றன. ஒளியின் குணநலன்களை மனிதன் அறிவதற்கு முன்னரே எறும்புகள் ஒளியைப்பற்றித் தெரிந்து கொண்டு அதனைப் பயன்படுத்திவருவது விந்தையிலும் விந்தையல்லவா? இது அல்லாஹ் வழங்கிய அற்புத ஆற்றல் அல்லவா?


நோய்கிருமிகளைத் தடுக்கும் ஆற்றல்


மனிதன் தன்னை நோய்கிருமிகளிலிருந்து தடுத்துக் கொள்வதைப்போல மற்ற உயிரினங்களும் தங்களை தற்காத்துக் கொள்ள சில தடுப்பு முறைகளைக் கையாளுகின்றன. அந்த வகையில் எறும்புகள் நோய்கிருமிகளை தடுக்க ஒரு வகை திராவகம் போன்ற திரவப் பொருளை உற்பத்திச் செய்கின்றன. இந்த திரவப் பொருளை தங்களின் உடலில் பரவச் செய்வதுடன் தங்களின் கூடுகளின் சுவர்களிலும் தடவுகின்றன. எறும்புகள் தங்களின் உடலை மட்டுமல்லஇதங்களது வசிப்பிடத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதை அறிந்து வைத்திருக்கின்றன என்பதை அறிய முடிகிறது. இதனை ஆராயும் போது எப்படிப்பட்ட பாதுகாப்பு முறையை இந்த அற்பமான எறும்பினத்தில் அல்லாஹ் அமைத்திருக்கிறான் எனபதை எண்ணி அவன் வல்லமையை உணர்ந்து அவனுக்கு ஒவ்வொரு உயிரினமும் துதி (தஸ்பீஹ்) செய்த வண்ணமுள்ளன என வான்மறை குர்ஆன் கூறுவதை மனிதர்களும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். இது மட்டுமா? இன்னும் எத்தனையோ அதிசயங்கள் அவற்றில் உள்ளன.


ஏளனம் செய்தோர் வியந்து நிற்கின்றனர்.


கடந்த காலங்களில் எறும்புகள் ஒன்றோடொன்று உரையாடிக் கொள்கின்றன. மிக நுட்பமான தகவல்களை பரிமாறிக்கொளகின்றன' என்று குர்ஆன் கூறியபோது எள்ளி நகையாடியோர் ஏராளம். 'இவையெல்லாம் கற்பனைகள்' என பரிகாசம் செய்தனர். ஆனால்இ அண்மையில் எறும்புகளைப் பற்றி வெளியட்டுள்ள ஆய்வுகள் மனிதனை வியக்கவைக்கின்றன.



விலங்குகள்  பூச்சிகள்  ஆகியவற்றின் வாழ்க்கை முறைகளை  ஆய்வு செய்தோர் 'எறும்புகளின் வாழ்கைப் போக்கு மனிதனின் வாழ்க்கை போக்கோடு மிகவும் நெருங்கிய தொடர்புடையவை          
எனக் கண்டுள்ளனர். அவை பின்வருமாறு :-



வியப்பூட்டும் வாழ்க்கை முறைகள்!


1. மனிதர்களைப் போன்றே எறும்புகள் இறந்த உடலகளை மண்ணில் புதைத்து விடுகின்றன.


2. தங்களின் அன்றாடப் பணிகளை மனிதர்களைப் போல் சீராக பங்கிட்டு நிர்வாகங்களை ஒரு திட்டமிட்டுக் கவனித்துக் கொள்கின்றன. மேலாளர்கள் (Managers),  மேற்பார்வையாளர்கள் (Supervisors),  தொழிலாளர்களை மேலாண்மை செயபவர்கள் ( Foremen) உழைப்பாளர்கள் (Workers)  என்று தனித்தனியாக துறைகளை  (Departments) வகுத்துச் செயலாற்றுகின்றன.


3. அவ்வப்போது ஒன்று கூடி தங்களிடையே அனைவரும் மகிழ்ச்சியோடு (Chatting)  அளவளாவிக் கொள்கின்றன.


4. தங்களுக்கிடையே மிகவும் நவீன முறைகளை கையாண்டு தகவல் பரிமாற்றங்கள் செய்கின்றன.


5. சீரான பொதுச் சந்தைகள் நடத்தி பண்டமாற்றும் செய்து வருகின்றன.


6. வெய்யில் காலத்திலேயே மழைகாலத்திற்குரிய நீண்ட நாள் தேவைக்கான தானிய மணிகளை சேமித்து வைக்கின்றன.


7. தானிய மணிகள் முளைவிட்டு வளரும் போது அவற்றின் அடிவேர்களை அறுத்துவிடுகின்றன. அவ்வாறு அறுக்காது விட்டுவிடின் அவை அழுகிப்போகும் என்பதைத் தெரிந்து வைத்துள்ளன.


8. சேமித்து வைத்திருக்கும் தானியக்களஞ்சியம் மாரிகாலத்தில் ஈரப்பசைமிக்கதாய் மாறிவிடும்போதுஇ அவற்றை வெளியே கொண்டு வந்து சூரிய கதிர் ஒளியில் காயவைக்கின்றன. அந்த தானிய மணிகள் சூரிய ஒளியில் காய்ந்ததும் உடனே உள்ளே கொண்டு சென்று பாதுகாக்கின்றன. ஈரப்பசையால் வேர்விட்டு அழுகிப்போய்விடும் என்ற வேளாண்மை அறிவைப் பெற்றிருப்பது விந்தையிலும் விந்தையல்லவா?


இறைவனின் அருள் வேதம் கூறிய அனைத்தும் இன்று உண்மையாகிவருவது


திருக்குர்ஆன் அல்லாஹ்வின் வேதம்'என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகளாகும்.


அறியுடையோர் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா?சிந்தித்துப் பார்க்கும் மக்களுக்கு அரிய படிப்பனை உள்ளது (குர்ஆன் 13:3,16:11 , 39:42,45:13)



குர்ஆனில் கொசு ஓர் அதிசயம்!


Ahmad Baqavi

கொசு தோற்றத்தில் மிகவும் சிறியது! அற்பமானது! ஆனால் படைப்பில் அது அற்புதமானது!!விந்தையானது. நுண்கருவி மூலம் பெரிது படுத்தப்பட்ட அதன் அற்புதத் தோற்றத்தை படத்தில் கீழே காணலாம்.





விந்தையான கொசு பற்றிய விபரங்கள்

1. அது பெண்பால். 2. அதற்கு அதன் தலையில் 100 கண்கள். 3. அதன் வாயில் 48 பற்கள்.


4. அதன் உடலில் மாறுபட்ட மூன்று இதயங்கள். 5. அதன் தும்பிக்கை நுனியில் ஆறு அறைகள்.


6. அவை ஒவ்வொன்றுக்கும் தனித்தனி அலுவல்கள் 7. ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று இறக்கைகள்.


8. எக்ஸ்ரே கருவி போன்ற நுண்ணிய தர்மோமீட்டர் பொருத்தப்பட்ட சிவப்பு நிறத்தில் ஒரு நுண்ணிய கருவி அதனுள் படைக்கப்பட்டுள்ளது. அதன் வேலை அது மனித உடலில் இருளில் வந்து அமர்ந்து இரத்தத்தை உறிஞ்சும் போது யாரும் கண்டு கொள்ள முடியாத அளவுக்கு மனிதனுடைய நிறத்திற்கேற்றவாறு தன் நிறத்தை மாற்றிக்கொள்கிறது..


9. மனித மூளையே வியக்குமளவுக்கு அதனிடமுள்ள கூரிய ஊசி முள்ளால் குத்தி சிறிஞ்சியைப் போல் உறிஞ்சிக் குடிக்கிறது. அது எப்படீ பாய்ந்து உள்ளே செல்கிறது என்பதை நாம் தெரிந்து கொள்ள முடியாது.


10. மனிதனின் இரத்த வாசனையை 60 கி.மீட்டர் தொலைவிற்கு அப்பாலிருந்து நுகர்ந்து தெரிந்து கொள்ளும் அற்புத ஆற்றலை அது பெற்றிருக்கிறது.


11. இவை எல்லாவற்றிற்கும் மேலாக அதன் முதுகின் மேல் கண்களால் பார்க்கமுடீயாத அளவுக்கு மிகச்சிறிய ஒரு பூச்சி உள்ளது என இன்றைய அறிவியல் கண்டு பிடித்துள்ளது.


அது அல்லாஹ்வின் அருள் மறையின் அற்புதச்செய்தியை முன்னறிவிப்பதாக உள்ளது. அது என்ன வசனம் தெரியுமா?


إِنَّ اللَّهَ لاَ يَسْتَحْيِي أَن يَضْرِبَ مَثَلاً مَّا بَعُوضَةً فَمَا فَوْقَهَا நிச்சயமாக அல்லாஹ், கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26)


இந்த இறை வசனம் எப்போது அருளப்பட்டது தெரியுமா? இணைவைப்பவர்களுக்கு எடுத்துக்காட்டாக அல்லாஹ் 22:73-வது வசனத்தில் ஈயையும், 29:41-வது வசனத்தில் சிலந்தியையும் உவமையாகக் கூறுகிறான். இதைக் கேட்ட இணைவைப்பாளர்கள் ஈயும், சிலந்தியும் அல்லாஹ்வின் வேதத்தில் கூறப்படுகின்றனவா? என்று இளக்காரமாகக் கேட்டனர்.


அப்போது தான் அல்லாஹ் இவ்வசனங்களை அருளி இப்படிக் கூறினான். நிச்சயமாக அல்லாஹ் கொசுவையோ அதைவிட அற்பமானதையோ (அதன் மேலுள்ளதையோ) உதாரணமாகக் கூற வெட்கப்படமாட்டான் (அல்பகரா :2:26) அதாவது சத்தியம் என வந்து விட்டால் அது எவ்வளவு அற்பமானதாக இருந்தாலும்,பெரிதாக இருந்தாலும் அதைக் கூறுவதற்கு அல்லாஹ் தயங்கமாட்டான். எனக்கூறிவிட்டு அறிவியலுக்கு ஒரு சவாலாக கண்ணுக்குப் புலப்படாத ஓர் அற்பமான ஒரு பூச்சியையும் அதன் மேல் படைத்துள்ளான். அது அதன் குழவிக்குஞ்சாகவோ அதை தூய்மைப் படுத்தும் ஒரு அரிய படைப்பாகவோ இருக்கலாம். அதை அல்லாஹ்வே நன்கறிந்தவன். இதில் நூறு கண்கள் இருக்கமுடியுமா? என்ற ஐயம் நம்மில் எழலாம். அதற்கு விடையாக, படம்-1 கொசுவின் முகத் தோற்றத்தின் ஒரு பகுதியையும், படம்-2 . A. முகத் தோற்றத்தையும், B அதன் நுண்ணிய கண்களையும், C அதைப் பெரிது படுத்திக் காட்டிய கண்களையும் படத்தில் காணலாம். ஸுப்ஹானல்லாஹ் ! அல்லாஹ் யாவற்றின் மீதும் ஆற்றலுள்ளவன்.வல்லமையுள்ளவன் என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.

ஆதாரம்: அல்மஃரிபீ பில்குர்ஆனில் கரீம்.காம்,

www.vp.rghh.com




வெள்ளி, 2 அக்டோபர், 2009

அல்லாஹ்வின் பெயரால்


நாத்திகம் பகுத்தறிவு வாதமா...? பாகம் 2

நம்பிக்கை இல்லாமல் வாழ்க்கை இல்லை...!


இறைவனை நம்பிச் செயல் படத் தயங்கும் மனிதன் தனது வாழ்வில் தனது காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல் பட வேண்டிய நிர்பந்த நிலையில்தான் இருக்கிறான் படிக்கும் மாணவன் திறமையுடன் படித்து முடித்தால் உயர்ந்த உத்தியோகமும் அதன் மூலம் வளமான வாழ்வும் கிடைக்கும் என்று நம்பித்தான் படிக்கிறான். உயர்ந்த உத்தியோகத்தையும் வளமான வாழ்வiயும் கண்ணால் பார்த்த பின் படிக்க ஆரம்பிப்பதில்லை. விவசாயி வீட்டில் பாதுகாப்பாக இருந்த நெல்லை வயலில் கொண்டு கொட்டுகிறான் என்றால் ஒரு மூட்டைக்குப் பகரமாக பல மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பித்தான் செய்கிறான். வியாபாரி கையிலுள்ள முதலையெல்லாம் போட்டு வியாபாரம் செய்ய முற்படுகிறானென்றால் அதை விட அதிகம் முதல் கிடைக்குமென்று நம்பியேச் செய்கிறான். ஆக மனிதன் செய்யும் ஒவ்வோரு செயலும் நம்பிக்கையின் அடிப்படையிலேNயு பிறக்கின்றது. நம்பியபடி கிடைக்கின்றது. கிடைக்காமலும் போகலாம்.இரண்டிற்கும் வாய்ப்பு உண்டு! இருந்தாலும் மனிதன் நம்பிச் செயல் படத்தான் செய்கிறான். அதிக மூட்டைகள் கிடைக்கும் என்று நம்பி வீட்டிலிருந்த நெல்லையும் உரத்தையும் வயலில் கொட்டியவன் மழையில்லா காரணமாக பயிர் காய்ந்து நஷ்டப்படவும் நேரிடுகிறது. அதனால் அவன் விவசாயத்தை விட்டு விடுவதில்லை.


மனிதனது ஒவ்வொரு முயற்சியிலும் அவன் நம்பிக்கை வைத்ததற்கு நேர் மாற்றமாக நஷ்டம் அடையும் சந்தர்ப்பங்களும் ஏற்படுவதுண்டு. அதன் காரணமாக அதன் பின் மனிதன் அந்த முயற்சியைக் கைவிட்டு விடுவதில்லை. இப்படி உலகக் காரியங்கள் அனைத்தையும் நம்பிச் செயல்படும் மனிதன் மறு உலக வாழ்க்கை விஷயத்தில் மட்டும் நம்பி செயல் படத் தயாராக இல்லை. என்பது விவேகமான செயலா? என்பதை சிந்திக்கவும். நம்பிச் செயல்படும் உலக காரியங்களின் பலன்களை உலகிலேயே கண்டு விடுகிறோம். மறுமை சம்பந்தப்பட்ட விஷயங்கள் அப்படி அல்லவே? என்று கூறுவதும் தவறான கூற்றேயாகும். நம்பிச் செய்யும் ஒவ்வொரு காரியத்தின் பலனையும் கண்டு கொள்ள வௌ;வேறு கால அவகாசம் தேவைப்படுகின்றது. சிலவற்றின் பலன்களை பல மாதங்களில் பார்க்கிறோம் சிலவற்றின் பலன் களை சில மாதங்களில் பார்க்கிறோம் சிலவற்றின் பலன்களை சில வருடங்களில் பார்க்க முடிகின்றது ஆக ஒவ்வொன்றிற்கும் பலனைப் பார்க்க கால அவகாசங்கள் கண்டிப்பாகத் தேவைப் படுகின்றது அந்தக் கெடு தீருமுன் பலனைப் பார்க்க முடியாது. ஒரு விவேகி அப்படிப் பார்க்க முற்படவும் மாட்டான். இதுபோல் மறு உலக வாழ்க்கையின் பலன்களைப் பார்க்க மரணம் காலக்கெடுவாக இருக்கிறது. அந்தக் கெடு தீரு முன் பலன்களைப் பார்க்க முற்படுவது அறிவுடைமையா? என்று இப்போது சிந்தித்துப் பாருங்கள்!


காலம் கனியுமுன்...?


தாயின் கர்ப்பத்திலிருக்கும்போதுதான் குழந்தையின் அனைத்து உறுப்புகளும் உருவாகின்றன. கை.கால்.காது.மூக்கு. இன்னும் இதயம் உள்பட அனைத்து உறுப்புகளின் பலனையும் தாயின் கர்ப்பப் பையிலேயே குழந்தை அறிய முற்பட்டால் அது முடிகிற காரியமா? தாயின் கர்ப்பப் பை என்ற இருளிலிருந்து இந்த உலகத்திற்குவந்த பின்னரே அவற்றின் பலன்களை குழந்தை காண்கிறது. ஊனமுள்ளதாகக் குழந்தை பிறந்தால் இந்த உலகில் வாழும் காலமெல்லாம் ஊனமாகவே வாழ்ந்து கஷ்டங்களை அனுபவிக்கிறது. பத்து மாதத் தயாரிப்பு உதாரணமாக ஐம்பது வருடங்கள் வாழ்ந்தால் அதாவது 600 மாதங்களின் வாழ்வைப் பாதிக்கிறது இதை எந்த நாஸ்திக நண்பரும் மறுக்க மாட்டார். என்பதில் சந்தேகம் இருக்க முடியாது. இதே அடிப்படையில் தாயின் கர்ப்பப் பையில் 10 மாதங்களில் தயாராகும் உடல் இவ்வுலகில் வந்து அதை விட பல மடங்கு அதிகமான காலம் கர்ப்பப் பையில் தயாரானதற்கு ஒப்ப நலன்களையோ கெடுதிகளையோ அனுபவிப்பது போல் இவ்வுலகில் தயாராகும் ஆன்மா மறுஉலகில் போய் நலன்களையோ. கெடுதிகளையோ அனுபவிக்கும் என்பதையும். குழந்தை இவ்வுலகிற்கு வந்த பின்னரே உடல் உறுப்புகளின் பலன்களைப் பார்க்கிறது கர்ப்பப் பையில் பார்க்க முடியவில்லை. என்பது போல் மறு உலகின் லாப நஷ்டங்களை அங்கு போன பின்னரே அறிந்து கொள்ள முடியும். இவ்வுலகில் அறிந்து கொள்ள முடியாது. என்பதையும் உடலின் உறுப்புகள் கர்ப்பப் பையில் தயாரானது போல் ஆன்மா இவ்வுல கிலேயே தயாராகியே ஆகவேண்டும். என்பதையும் சிந்திப்பவர்கள் எளிதில் அறிந்து கொள்ள முடியும்!


இந்த மறுக்க முடியாத உண்மைகளை நாஸ்திக நண்பர்கள் விளங்கி தங்களின் போக்கை மாற்றிக் கொள்ள முன் வர வேண்டும். அப்படியானால் தான் அவர்கள் வாழ்வில் வெற்றிபெற முடியும்;. கைமேல் பலன்களைப் பார்த்துத்தான் செயல்படுவேன் என்று அடம் பிடிக்கும் மனிதன். இவ்வுலகிலும் வெற்றி பெற முடியாது. மறு உலகிலும் வெற்றி பெற முடியாது.!


இறைவன் அக்கிரமங்களைப் பார்த்துக்; கொண்டிருக்கலாமா...?


அடுத்து நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கும். இன்னொரு பெரிய சந்தேகம். 'அப்படி இறைவன் ஒருவன் இருந்தால் உலகில் நடைபெரும் அக்கிரமங்களை எல்லாம் எப்படிப் பார்த்துக் சகித்துக் கொண்டிருக்கிறான்? உடனடியாக தவறு செய்பவர்களை இறைவன் தண்டித்தால். இப்படிப் பட்ட தவறுகள் இடம் பெறாதல்லவா? உலகில் தவறுகள் மலிந்து காணப்படுவதால் அப்படி ஒரு இறைவன் இருக்க முடியாது. என்பதாகும் இதைப்பற்றி அடுத்து விரிவாகப் பார்ப்போம்!


இறைவன் ஒருவன் இருக்கிறான் என்றால். இந்த உலகில் நடக்கும் பஞ்சமா பாதகங்களை எப்படி சகித்துக் கொண்டிருக்கிறான்? எந்தவொரு நல்ல உள்ளமும் தீமைகளை நடக்கக் காண்டால் அதைத் தடுத்து நிறுத்த முற்படும்போது. இறைவன் எப்படி கண்டும் காணதது போல் இருக்க முடியும்? அப்படியொரு இறைவன் இருக்க முடியாது. என்பது நாஸ்திக நண்பர்களுக்கு இருக்கக் கூடிய பெரிய சந்தேகம். ஏன் இது அவர்களின் வாதமுங்கூட.


நாஸ்திக உள்ளங்களில் இந்த எண்ணம் மேலோங்கி இருப்பதற்குக் காரணம் அவர்கள் சிந்தனை கள் அனைத்தும் இந்த உலகைப் பற்றி மட்டும் அமைந்து இருப்பதேயாகும். அவர்களுக்கு இந்த உலகம் மிகப்பெரிய ஒன்றாகவும். அதில் இடம்பெரும் சம்பவங்கள் மிகவும் பாரதூரமானவையாகவும் தெரிகின்றன. மனித இயல்பும் அதுவே. ஒன்றைப்பற்றிய தாழ்ந்த எண்ணங்கள் எப்பொழுது மனித உள்ளத்தில் ஏற்படுமெ ன்றால். அதைவிட உயர்ந்த ஒன்றை அறியும்போதுதான் ஒரு உதாரணம். கரும்பலகையில் சுமாரான ஒரு பெரிய கோடு வரையப்பட்டிருக்கிறது. அந்த ஒருக்கோட்டை மட்டும் பார்க்கும்போது நம் கண்களுக்கப் பெரிதாகத் தெரிகிறது. ஆனால் அந்தக் கோட்டுக்குப் பக்கத்திலே அதைவிட இரு மடங்கு பெரிதான இன்னொரு கோட்டை வரைந்து விடுவோமானால் முன்பு நம் கண்களுக்குப் பெரிதாகத் தெரிந்த அந்தக் கோடு சிறியதொருக் கோடாக ஆகிவிடுகிறது. சுருக்கமாக ஒன்றோடு ஒன்றை ஒப்பு நோக்கிப் பார்க்கும் போதுதான் சிறியதும் பெரியதும். அவசியமானதும் சாதாரணமானதும் நமக்கு எளிதில் புரிகின்றது. ஒன்றை மட்டும் வைத்துக் கொண்டு. அதைப் பற்றி மட்டுமே ஒருவன் சிந்தித்துக் கொண்டிருந்தால். அவனுக்கு அந்த ஒன்று மட்டுமே பெரிதாகவும் பிரமாதமாகவும் தெரியும். இதில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஆகவே நாஸ்திக நண்பர்கள் இந்த உலகம் ஒன்றை மட்டுமே நம்பி அதைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருப்பதால் அதுவே வாழ்க்கையின் அனைத்து லட்சியமும் என்று எண்ணுகிறார்கள். இதையும் ஆச்சரியப்படுவற்கு ஒன்றுமில்லை;.


மரணத்திற்குப் பின்னால் உள்ள வாழ்க்கை- மறு உலகம் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு இல்லை அதன் காரணமாக மனித இயல்பின்படி அவர்களின் சிந்தனை அவ்வாறே அமைந்திருக்கும். உலக காரியம் ஒவ்வொன்றும் மிகவும் பாரதூரமானதாகவும் அவற்றில் சில நியாயமற்றதாகவும் அவர்களுக்குத் தோன்றும்


வயிற்றில் ஒரு பெரிய கட்டி. அதை அறுவை சிகிச்சை செய்து குணப்படுத்த வைத்தியர் முற்படு கிறார் வயிற்றைக் கீறியே கட்டியை அகற்றி குணப்படுத்த வேண்டும் என்பது வைத்தியருக்கும் விஷயம் அறிந்தவர்களுக்கும் நியாயம் என்று படுகிறது விஷயம் அறியாதோருக்கு வயிற்றைக் கீறும் செயல் மிகப்பெரும் கொடுமையாகத் தோன்றும். காரணம் முன்னவர்கள் பின் விளைவை விளங்கியிருக்கிறார்கள். பின்னவர்கள் பின் விளைவை விளங்கிடாதவர்கள்- அறியாதவர் களாக இருக்கிறார்கள். இப்படி நிறைய உதாரணங்கள் உண்டு. மேற்காட்டிய உதாரணத்தில் பின்னவர்களாக நாஸ்திக நண்பர்கள் இருப்பதால் உலகில் நடை பெறும் பல சம்பவங்கள் நியாயமற்றவைகளாக அவர்களுக்குத் தோன்றுகின்றன!


மரணத்திற்குப் பின்னுள்ள மறுவுலக வாழ்க்கையைப் பற்றி வேண்டுமானால். நாஸ்திகர்கள் நன்கு விளங்கிக் கொண்டபின் சிந்தித்துக் கொள்ளட்டும். இப்போது இங்கே அவர்களும் மறுக்க முடியாத சில மாபெரும் உண்மைகளை அவர்களின் ஆழ்ந்த சிந்தனைக்கு விருந்தாகத் தருகிறோம்.


மறுக்க முடியாத உண்மைகள்...


நாஸ்திகர்கள் மிகவும் பெரிதாக எண்ணிக் கொண்டிருக்கும் (பூமி) சூரியக் குடும்பக் கோள் களிலேயே மிகச் சிறிய ஒன்றாகும். அண்ட வெளியில் காணப்படும் பெரும் பெரும் கோள்களுக்கு முன்னால் இந்த பூமி எம்மாத்திரம்? பூமி தன்னைத்தானே சுற்றிவர ஒருநாள் ஆகிறது. ஏனைய சில கிரகங்களோ தன்னைத்தானே ஒரு முறை சுற்றி வர எத்தனையோ ஆயிரம் ஆண்டுகள் ஆகும் என்று விஞ்ஞானிகள் கணி த்துக் கூறுகிறார்கள். விஞ்ஞான உலகம் இந்த உண்மைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. எண்ணற்ற பெரிய கோளங்கள் இருந்தாலும் அவைகளுள் இந்த பூமியைத் தவிர வேறு எந்த கோளத்திலும் மனித சஞ்சாரம் இருப்பதாக இதுவரை எந்த விஞ்ஞானியும் கண்டுபிடிக்கவில்லை. அப்படியென்றால் மனித சஞ்சாரமற்ற அந்தப் பெரும் கோளங்கள் இயங்க வேண்டியதன் அவசியமென்ன? இதை நாஸ்திக நண்பர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். நடுநிலையோடு சிந்திப்பவர்களுக்கு மனித வாழ்வு மரணத்தோடு முற்றுப் பெறுவதில்லை உலகில் தோன்றி நெறிமிக்க நிறை வாழ்வு வாழ்ந்த இறைத்தூதர்கள் சொல்லிச் சென்றதுபோல் மரணத்திற்குப் பின்னால் தான் மனிதனுடைய உண்மையான வாழ்வே ஆரம்பமாகிறது. என்பது எளிதில் புரியும். அப்போதுதான் இன்று உலகில் நியாயமானது நியாயமற்றது என்று சொல்லப்படுபவற்றை நடுநிலையாளர்கள் ஏற்றுக் கொள்ளமுடியும். காரணம்.


நியாயமானவை என்று சொல்லப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள் இவ்வுலக வாழ்வில் பெரும் பாலும் வறுமை. கஷ்டம். துன்பம் ஆகியவற்றை அனுபவிப்பதையே பார்க்கிறோம். இதற்கு நேர் மாற்றமாக நியாயமற்றவை என்று கருதப்படுபவற்றை எடுத்து நடப்பவர்கள் பெரும்பாலும் செல்வ செழிப்பிலும் சந்தோஷ த்திலும் மூழ்கியிருப்பதையும் பார்க்கிறோம். நாஸ்திகர்கள் சொல்வதுபோல் மரணத்தோடு வாழ்வு முடிவு பெறுகிறது என்றால். இவ்வுலகில் செழிப்பையும் சந்தோஷத்தையும் தரும் காரியங்கள் நியாயமானவையாக வும். வறுமை கஷ்டம் துன்பம் தரும் காரியங்கள் நியாயமற்றவைகளாகவும் மக்களால் கருதப்படவேண்டும். நிலைமை அவ்வாறில்லை என்பதை நாஸ்திகர்களும் ஏற்றுக்கொள்வார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? மனித செயல்களின் விளைவுகள் இவ்வுலகோடு முற்றுப்பெறுவதில்லை. அவை மரணத்திற்குப் பின்பும் தொடர்கின்றன. என்பதைத் தெளிவாகத் தெரியமுடிகிறது. நற்செயல் புரிபவன் இவ்வுலகில் வறுமை கஷ்டம் துன்பம் இவற்றில் கிடந்து உழன்றபோதிலும் மறுமை வாழ்வில் அவன் புரிந்த நற்செயல்- நியாயமான செயல் களுக்குரிய நல்ல பலனை காண்பது உறுதி. அதே போல் நியாயமற்ற செயல்களைப் புரிபவன் இவ்வுலகில் செல்வச்செழிப்புக் கொழிக்க இன்பம் அனுபவித்து வாழ்ந்த போதிலும் மறுமை வாழ்வில் அவன் புரிந்த நியாயமற்ற செயல்களுக்குரிய தண்டனையைப் பெற்றே தீருவான்.


இந்த நிலை இருக்குமானால் தான் இன்று உலகில் நியாயமானசெயல்கள். நியாயமற்றசெயல் கள். என்று தரம் பிரித்து வைப்பதில் நியாயம் இருக்க முடியும். மனிதனுடைய செயல்கள் குறித்து விசாரித்து தீர்ப்பளிப்பதற்கென்று ஒருநாளை இறைவன் ஏற்படுத்தியிருக்கிறான். அதனால்தான் பரீட்சா வாழ்வு நடத்தும் மனிதன் உடனுக்குடன் உரிய விசாரணை. தீர்ப்பு. தண்டனை வழங்கப்படாது விடப்பட்டிருக்கிறான்.
அல்லாஹ் நாடினால் தொடரும்

அல்லாஹ்வின் பெயரால்


இதோ! நமது கடவுள் வார்த்தையை கேளுங்கள்!

அவனே இரவைப் பகலில் புகுத்துகிறான் பகலை இரவில் புகுத்துகிறான், சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கின்றான். இவை அனைத்தும் குறிப்பிட்ட காலத்திட்டப்படியே சுற்றி வருகின்றன.. (திருக்குர்ஆன் 35:13)


இன்னும் அவன்தான் மனிதனை (இந்திரிய)நீரிலிருந்து படைத்து, பின்னர் அவனுக்கு வம்சத்தையும், சம்பந்தங்களையும் ஏற்படுத்துகிறான். மேலும் உம்முடைய இறைவன் பேராற்றலுள்ளவன். இவ்வாறிருந்தும், அவர்கள் அல்லாஹ்வை அன்றி தங்களுக்கு நன்மை செய்யவோ, தீமையை செய்யவோ இயலாதவற்றை வணங்குகின்றனர்.   (திருக்குர்ஆன் 25: 53,54,55)


இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; சூரியனையோ, சந்திரனையோ வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்    (அல்குர்ஆன் 41:37)
 
நம்பிக்கைக் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின்(சாத்தானின்) அருவருக்கத்தக்க செயல்களிலு -ள்ளவையாகும். ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள். (அல்குர்ஆன் 05:90,91)

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

அல்லாஹ்வின் பெயரால்

பூர்வீக வேதங்களில் இஸ்லாத்தைப் பற்றி..

ஒன்றே குலம் ஒருவனே தேவன் -திருமூலர்.                                      

அல்லோ ஜியேஷ்டம் பரமம் பூர்ணம் பிராமணம்
அல்லாம் அல்லா றஸூலா மஹாமத ரக பரஸ்ய
ஸ்பஸூரஸம் ஹாரினீ ஹூம் ஹரீம் அல்லோ றஸூல
மஹா மதரக பரஸ்ய அல்லோ அல்லா இல்லல்லெதி இல்லல்லா       (- அல்லோப நிஸத்.)



பொருள் : இறைவன் முதன்மையானவன். அவன் முழுமை பெற்றவன். அகிலம் அனைத்தும் அவனுக்கு உரியதாம். இறைவனின் பதவியில் நிலை பெற்றிருக்கும் முஹம்மது (ஸல்) இறையோனின் திருத்தூதராவார்


(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)

இந்து வேதங்களிலும் இஸ்லாமியக் கொள்கையே...

நட்ட கல்லை தெய்வமென்று நாலு புட்சம் சாற்றியே



சுற்றி வந்து மொண மொணன்று சொல்லும் மந்திரமேதடா?


நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்


சுட்ட சட்டி சட்டுவங்கள் கறிச்சுவை அறியுமோ?


ஓசை பெற்ற கல்லை உடைத்து உருக்கி நீர் செய்கிறீர்


வாசலில் பதித்த கல்லலை மழுங்கவும் மிதிக்கிறீர்


பூசை பெற்ற கல்லிலே பூவும் நீரும் சாற்றுகிறீர்.

ஈசனுக்குகந்த கல்லு இரண்டு கல்லுமல்லவே


(- சிவ வாக்கிய சுவாமிகள்)


(நபியே!) நீர் கூறுவீராக: அல்லாஹ் அவன் ஒருவனே. அல்லாஹ் (எவரிடத்தும்) தேவையற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (திருக்குர்ஆன் 112:1.2.3.4)

செவ்வாய், 29 செப்டம்பர், 2009

அல்லாஹ்வின் பெயரால்
ஓர் தாய் வயிற்று பில்லைகளே சிந்திப்பீர்

M.S.ரஹ்மத்துல்லாஹ்                                                                                    பாகம் 1

உலகில் வாழும் மக்களிடையே பலவிதமான மதங்களும் சாதிகளும் சித்தாந்தங்களும் உள்ளன. மக்களும் இதன்காரனங்களால் பல கூறுகளாக பிரிந்து பலதெய்வக் கொள்கைகளில் சிக்கி இவ்வுலக வாழ்க்கையையும் சத்தியமான மறுமை வாழ்க்கையையும் இழந்து அழிவைநோக்கி மிகவேகமாக நடைபோடுகின்றார்கள். அந்த அழிவிலிருந்து நம்மை நாம் பாதுகாத்துக்கொள்ளவேண்டும் அன்பு சகோதரர்களே!! எத்தணையோ விஷயங்களில் சிந்தித்து ஆராய்ந்து முடிவெடுக்கும் நாம் கடவுள் கொள்கை விஷயத்தில் கவனமற்று இருப்பது ஏனோ??


இதோ நமது கடவுளின் வார்த்தையை கேளுங்கள்


மனிதர்களே! உங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான். பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும் பெண்களையும் பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 4:01)


இரவும், பகலும் சூரியனும், சந்திரனும் அவனுடைய அத்தாட்சிகளில் உள்ளவையாகும். ஆகவே, நீங்கள் அல்லாஹ் ஒருவனையே வணங்குங்கள்; சூரியனையோ, சந்திரனையோ வணங்காதீர்கள். இவற்றைப் படைத்தவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள். (அல்குர்ஆன் 41:37)


வானங்களையும், பூமியையும் (அல்லாஹ்) படைத்திருப்பதிலும்; இரவும், பகலும் மாறி, மாறி வருவதிலும்; மனிதர்களுக்குப் பயன் தருபவற்றைக் கடலில் சுமந்து செல்லும் கப்பல்களிலும்;, வானத்திலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்கி அதன் மூலமாக இறந்தபின் பூமியை உயிர்ப்பிப்பதிலும்;, அதில் எல்லா விதமான பிராணிகளையும் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை பலவாராக சுழலச் செய்வதிலும்;, வானத்திற்கும், பூமிக்குமிடையே கட்டுப்பட்டிருக்கும் மேகங்களிலும் சிந்தித்துணரும் மக்களுக்கு சான்றுகள் உள்ளன.(திருக்குர்ஆன் 2:164)


அல்லாஹ் நாடினால் தொடரும்


திங்கள், 28 செப்டம்பர், 2009

நாத்திகம் பகுத்தறிவு வாதமா...? பாகம்-1

அல்லாஹ்வின் பெயரால்

நாத்திகம் பகுத்தறிவு வாதமா...? பாகம்-1

பிரிவினர்...இன்று உலகில் வாழும் மனித சமுதாயத்தை இரண்டு பெரும் பிரிவினர்களாகப் பிரிக்கலாம் அவர்களில் ஒரு கூட்டம் இறைவனையும் மறுமையையும் மறுக்கும் கூட்டம் வாழ்க்கை வாழ்வதற்கே ஆண்டு அனுபவிப்பதற்கே பிறந்திருக்கிறோம் தம் மனம் சரியென்று கருதுவதையே-காண்பதையே வாழ்க்கையாகக் கருதி. வாழ்ந்து அனுபவித்து மடிய வேண்டியதுதான். மடிந்தபின் மண்ணோடு மண்ணாக ஆகி விடுவோம் அதன் பின் ஒரு வாழ்க்கை இல்லை. என்பதே இக்கூட்டத்தாரின் நம்பிக்கையாகும். இவர்களையே நாஸ்திகர்கள் என்று அழைக்கிறோம்;இந்த நாஸ்திக நண்பர்கள் என்ன சொல்கிறார்கள்? இவர்களின் வாதத்தில் உண்மையிருக் கிறதா? அவர்கள் வாழ்வில் வெற்றியடையக்கூடியவர்களா? என்பனவற்றை அவர்கள் மதித்துப்போற்றும் பகுத்தறிவு கொண்டே ஆய்வு செய்வோம்.

இவர்கள் தங்களைப் பகுத்தறிவுவாதிகள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள் அதாவது தங்கள் சிந்தனையில் வராதவற்றை எல்லாம்.புலன்களுக்கு எட்டாதவற்றையெல்லாம். மறுத்து விடுவது என்பதே இவர்களின் பகுத்தறிவு வாதமாகும். அந்த அடிப்படையில் இறைவனை இவர்களின் அறிவுத் திறமையால் ஆராய்ந்தறிய முடியவில்லை. புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை.மறுமை விஷயத்திலும் இதே நிலைதான்! ஆகவே இறைவனும் இல்லை. மறுமையும் இல்லை என்று துணிந்து கூறிவிடுகிறார்கள்.

பகுத்தறிவின் நிலை...நாஸ்திக நண்பர்கள் நம்பிக்கை வைத்திருக்கும் பகுத்தறிவும். புலன்களும். எந்த அளவு நம்பிக்கைக்கு உரியன என்பதை முதலில் பார்ப்போம். ஏனென்றால் அளப்பதற்கு முன் அளக்கும் கருவி யையும். நிறுப்பதற்கு முன் நிறுக்கும் கருவியையும். கண்டிப்பாக சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இல்லை யென்றால் அளவையிலும் நிறுவையிலும் தவறுகள் ஏற்ப்பட்டு விடும் என்பதை நாஸ்திக நண்பர்களும் மறுக்க மாட்டார்கள்!

பகுத்தறிவைக் கொண்டு மிகப் பெரிய விஷயமான இறைவனையும் இன்னொரு பெரிய விஷய மான மறுமையையும் ஆராயப் புகுமுன். அதே பகுத்தறிவைக் கொண்டு மட்டும் சிறிய விஷயமான நமக்கு நெருக்கமான தாயையும். தந்தையையும் முதலில் அறிந்து கொள்ள முயற்சி செய்தால் அதன் முடிவு என்ன? தலை முடியை பிய்த்துக் கொண்டாலும் சுயமாகத் தம் பகுத்தறிவைக் கொண்டு இவர்கள் தம்மைப் பெற்றெடுத்த தாயையும் தந்தையையும் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. உடனே இவர்கள் எனக்கு தாயும். தகப்பனும் இல்லை. நான் வானத்திலிருந்து குதித்து விட்டேன் என்று சொல்வார்கள்? இங்கு தன்னைப் பெற்றெடுத்தவர்களை அறிந்து கொள்ள இவர்களின் பகுத்தறிவும் புலன்களும் உதவுவதாக இல்லை. ஊரை நம்பி தாயையும். தாயை நம்பி தந்தையையும் அறிந்து கொள்ள வேண்டிய நிலையில் இருக்கிறார்கள். தன்னைப் பெற்றெடுத்த தனக்கு மிகவும் நெருக்கமான பெற்றோரைத் தனது பகுத்தறிவு கொண்டு அறிந்து கொள்ள முடியாதவனா அந்த பகுத்தறிவின் துணை கொண்டு தன்னையும் தன் பெற்றோ ரையும் அகிலங்கள் அனைத்தையும் படைத்துப் போஷிக்கக் கூடிய சர்வ வல்லைமைமிக்க இறைவனை அறிந்து கொள்ள முடியுமா? ஒரு போதும் முடியாது! தங்கள் பகுத்தறிவையும் சிந்தனா சக்தியையும் பெரிதாக நம்பும் இந்த நாஸ்திகர்கள் தாங்கள் தங்கள் தாயின் கர்ப்பப்பையில் 10 மாதம்இருந்து வந்ததை தமது சிறு பிராயத்தில் நடந்த சம்பவங்களை சிந்தித்து விளங்கிக் கொள்ள முடிகின்றதா? கண் முன்னால் பல குழந்தைகள் தாயின் வயிற்றிலிருந்து பிறப்பதைப் பார்த்து விளங்குகிறோம் என்று சொல்வது தவறு! அப்படியொரு வாய்ப்பு தங்களுக்குக் கிடைக்க விட்டால் தாங்கள் கர்ப்பப்பையிலிருந்து வந்ததை மறுப்பார்களா? நடந்த நிகழ்ச்சியைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முடியாதவன் நடக்கப் போகும் ஒரு நிகழ்ச்சியை அதுவும் மரணத்திற்குப் பின் நடக்க இருப்பதைச் சிந்தித்து விளங்கிக் கொள்ள முற்படுவது விவேகமான செயலா? என்று சிந்திப்பார்களாக!

அ...ப்...பா என்று சொல்வதற்கே தாளம் போடுகிறவன் திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல முடியாது என்பதையும் 2 ம் 2 ம் 4 என்பதைத் தெரியாதவன் 2 ம் 93 ம் எவ்வளவு? என்பதை நிச்சயமாக அறியமாட்டான். என்பதை எவ்வளவு நிச்சயமாக அறிந்து வைத்திருக்கிறோமோ. அதே போல் பெற்றெடுத்த வர்களை பகுத்தறிவால் அறிய முடியாதவரை இறைவனையும். மறுமையையும் நிச்சயமாக அறிந்து கொள்ள முடியாது என்பதையும் உணர வேண்டும் ஒன்றுமே இல்லாமல் இருந்து இன்று மனிதனாக உலா வருகிறோமே. இதை முறையாகச் சிந்தித்தால் நம்மைப் படைத்த இறைவன் இருக்கிறான் என்பதை உணர முடியும்!உலகில் பார்க்க முடியாதவை பல...அடுத்து எத்தனையோ காரியங்களை கண்ணால் பார்க்க முடியாமல் அவற்றின் விளைவுகளை வைத்து நாஸ்திகர்கள் ஏற்றுக்கொள்ளத்தான் செய்கிறார்கள்.

உயிர்.காற்று.வலி.மின்சாரம் இவற்றைக் கண்ணால் பார்க்க முடியாவிட்டாலும் விளைவுகளை வைத்து ஒப்புக்கொள்ளத்தான் செய்கிறார்கள் சிறுநீரில் சர்க்கரை இருக்கிறதா? என்று எந்த டாக்டரும் சுவைத்துப் பார்த்துச் சொல்வதில்லை அப்படி எந்த நாஸ்திக நண்பரும் எதிர் பார்க்கவும் மாட்டார்.சிறு நீரில் சர்க்கரையிருந்தால் அதன் விளைவு என்ன என்பதை வைத்தே ஒப்புக்கொள்கிறார்கள். இதேபோல் உடம்பிலுள்ள எத்தனையோ வியாதிகளைக் கண்ணால் பார்த்தோ. புலன்களால் நேரடியாக உய்த்துணர்ந்தோ வைத்தியம் செய்யப் படுவதில்லை வியாதி களின் விளைவுகளை வைத்தே முடிவு செய்யப்படுகிறது ஆறடி மனிதனுக்குள் இருக்கும் ஒரு வியாதியை நேரடியாகப் பார்க்க முடியவில்லை புலன்களாலும் உய்த்துணர முடியவில்லை. இவ்வளவுதான் மனிதனின் பகுத்தறிவின் புலன்களின் நிலைகள். இந்த நிலையில் இவற்றை வைத்துக் கொண்டு இறைவனையும் மறுமையையும் அறிய முற்படுவது விவேகமான செயலா? என்று நாஸ்திக சகோதரர்கள் சிந்திக்க வேண்டும் இதுவரை நாம் சொல்லி வந்தது போல் உலகில் எத்தனையோ விஷயங்களை பகுத்தறிவு கொண்டு புலன் கள் கொண்டு நேரடியாக விளங்கிக் கொள்ள முடியாதவற்றை ஒப்புக்கொள்ளும் நாஸ்திக நண்பர்கள் இறைவனையும் மறுமையையும் நேரடியாகப் பார்த்தே புலன்களால் உய்த்துணர்ந்தே ஒப்புக்கொள்வோம் இல்லையென்றால் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று விவாதிப்பது நாஸ்திகர்கள் ஏதோ ஒரு வகையில் தவறான நிலையில் இருக்கிறார்கள் என்பதையே நமக்கு உணர்த்துகிறது

இவர்களின் பகுத்தறிவு வாதத்தின் ஆழத்தை அறிந்து கொள்ள சரித்திரத்தில் இடம் பெற்றுள்ள ஒரு சம்பவத்தை- ஓர்அறஞருக்கும். நாஸ்திகருக்கும் நடந்து முடிந்த போட்டி விபரங்களை அறயத்தருகிறோம்.அழகிய படிப்பினை...ஓர் அறிஞர் இறைவன் இருக்கிறான் என்று சொன்னார்;.நாஸ்திகர் 'உங்களால் அப்படி நிரூபிக்கவே முடியாது பகிரங்கமாக நமது போட்டியை வைத்துக் கொள்வோம் மக்களெல்லாம் பார்வையாளர்களாக இருக்கட்டும்' என்றார். இருவரும் போட்டிக்கு ஒப்புக் கொண்டு நாளும் நேரமும் குறிப்பிடப்பட்டு அறிவிக்கப்பட்டது. குறிப்பிட்ட நாளில் நிர்ணயித்த நேரத்திற்கு சரியாக நாஸ்திகர் போட்டி நடை பெரும் இடத்திற்கு வந்து விட்டார் மக்கள் நிரம்பி வழிகிறார்கள் அறிஞரையோ காணவில்லை.

நாஸ்திகர் முகத்தில் மகிழ்ச்சி களை கட்டியிருந்தது இறைவன் இருக்கிறான் என்று நிரூபிக்க முடியாது என்று அஞ்சி அறிஞர் வீட்டிலேயே இருந்து விட்டார் என்று அங்கு பேசிக்கொள்ளப்படுகிறது இந்த நிலையில் தூரத்தில் அந்த அறிஞர் ஓட்டமும் நடையுமாக வருவது தெரிந்தது வேகமாக வந்த அறிஞர் மேடையில் ஏறினார்! முதலில் நான் காலதாமதமாக வந்ததற்கு உங்கள் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டு க்கோள்கிறேன். உரிய நேரத்தில் வீட்டை விட்டு கிளம்பி விட்டேன்.இங்கு வந்து சேர நான் ஒரு ஆற்றைக் கடந்து வர வேண்டும். வழக்கமாக தோணிக்காரன் இருப்பான் இன்று தோணிக்காரனும் இல்லை தோணியும் இல்லை. எனக்கு மிகவும் கவலையாகி விட்டது போட்டிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறோமே உரிய நேரத்தில் போகா விட்டால் அது எவ்வளவு பெரிய இழுக்கு என்று என் மனம் மிகவும் வேதனைப் பட்டது திடீரென்று ஒரு அதிசயம் நடந்துது! அங்கே தானாகவே ஒரு மரம் வந்தது அது தானாகவே தோணியாகத் தயாராகி விட்டது உடnனே மகிழ்ச்சியோடு நான் அதில் ஏறி இக்கரை வந்து ஓடோடிவருகிறேன். என்று சொல்லி முடித்ததுதான் தாமதம்: நாஸ்திகர் என்ன கதை விடுகிறீரா? தானாக மரம் வருமா? தானாத் தோணி தயாராகுமா? இதை எந்த முட்டாளும் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று ஆத்திரத்துடன் கேட்டார் அறிஞர் ஆத்திரப்படாமல் நிதானமாக ' சூரியன் தானாக சுழல்கிறது. பூமி தானாக சூழல்கிறது பூமியிலுள்ள அனைத்தும் தானாகவே உற்பத்தியாகி இருக்கின்றன என்று நீர் சொல்வதை நாங்கள் நம்ப வேண்டுமென்றால்... இவ்வளவு பெரிய பெரிய காரியங்கள் தானாகவே நடப்பது சாத்தியமென்றால்... சின்னஞ் சிறு காரியமான ஒரு மரம் தானாக வந்து தானாக தோணி உணடாவது மட்டும் சாத்தியமில்லாத காரியமோ? அதை நம்பக்கூடாதோ? ' என்று சொன்னார். இப்போது நாஸ்திகரின் முகத்தில் அசடு வழிந்தது தனது தவறை உணர்ந்தார் நாஸ்திகப்போக்கை மாற்றிக் கொண்டார். நண்பர்கள் இதிலிருந்து படிப்பினைப் பெறுவார்களா!

குற்றவாளி தப்பமுடியுமா...?பகுத்தறிவால் பெறப்படும் முடிவுகள் சரியாக இருக்குமானால் எந்த உண்மையான குற்றவாளி யையும் நீதிபதி குற்றவாளி இல்லையென்று தீர்ப்புக் கூறக் கூடாது நாட்டில் இவ்வாறு நடப்பதில்லை உண்மையான குற்றவாளிகள் விடுவிக்கப் படுகிறார்கள். நிரபராதிகள் தண்டிக்கப் படுகிறார்கள். இது ஒன்றே போதும் பகுத்தறிவின் நிலையை உணர்ந்து கொள்ள. நாஸ்திக நண்பர்களே! பகுத்தறிவை மட்டும் நம்பினால் மோசம் போய் விடுவோம் சிந்தித்து திருந்த வாருங்கள். அடுத்து இறைவனையும். மறுமையையும் பகுத்தறிவாலும் புலன்களாலும் மட்டும் ஏன் அறிந்து கொள்ள முடியவில்லை என்பதற்கான காரணங்களைப் பார்ப்போம்.இறைவனைப் பார்க்க முடியுமா...? நாஸ்திக நண்பர்கள் ' இறைவனைக் காட்டுங்கள் கண்ணால் பார்த்து ஏற்றுக்கொள்கிறோம்' என்று பிடிவாதம் செய்கின்றனர். இந்த வாதமே மிகவும் பலவீனமான வாதமாகும். இந்த வாதத்தின் காரணமாக மக்களில் பலர் அதிசயமானஒரு காட்சியையோ. ஒரு நிகழ்ச்சியையோ கண்ணால் பார்த்தவுடன் அதனையே தெய்வமாகவோ. தெய்வாம்சம் பெற்றதாகவோ. ஏற்றுக் கொள்ளும் மன நிலையைப் பெற்று விடுகின்றனர்.

ஆனால் உண்மை என்ன தெரியுமா? உண்மையான இறைவன் எந்த மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரமுடியாது. அப்படி வரும் ஒன்று நிச்சயாமாக இறைவனாக இருக்கமுடியாது. காரணம் மனிதனது பார்வையிலோ. புலன்களின் உய்த்துணர்விலோ வரக் கூடிய ஒன்று நிச்சயமாக சிலக் கட்டுப்பாட்டிற்குள் இருந்தாக வேண்டும். கடடுபாட்டிற்குள் கட்டுப்படும் ஒன்று எப்படி இறைவனாக இருக்க முடியும்?உதாரணமாக நாம் ஒரு பொருளைப் பார்க்க வேண்டுமென்றால் அதற்கு சில நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும்.

அப்படியானால் தான் அந்தப் பொருளைப் பார்க்க முடியும்; அந்தப் பொருளுக்கு ஒரு உருவம் இருக்க வேண்டும். அந்தப் பொருளில் வெளிச்சம் பட வேண்டும் அந்தப் பொருளுக்கும் கண்ணுக்கும் இடையில் திரை இருக்கக் கூடாது. இவை பார்ப்பதற்குறிய நிபந்தனைகளாகும். அந்தப் பொருளுக்கு உருவம் இல்லையென்றால் நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளில் வெளிச்சம் பட வில்லையென்றால்- இருட்டில் இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது. அந்தப் பொருளுக்கும் கண்ணுக்குமிடையில் சாதாரண ஒரு திரை இருக்கிறதென்றால் நம்மால் பார்க்க முடியாது.
ஆக இவையெல்லாம் சரியாக இருந்து. அந்தப் பொருளிலிருந்து வெளிச்சம் வெளியாகி. அது நம் கண்களின் ஒளித் திரையை (சுயவiயெ) அடைந்திருந்தால் மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது. அந்தப் பொருள் நமது கண்களின் கட்டுப்பாட்டில் வந்தால்மட்டுமே நம்மால் பார்க்க முடிகின்றது மிகவும் சிறிய பொருளாக இருந்தால் அதைப் பெரிதாகிக் காட்டும் ஒரு கருவியின் உதவி கொண்டே பார்க்க முடிகின்றது.இப்படிப் பட்ட கட்டுப்பாட்டிற்குள்- நிபந்தனைக்குள் வரும் ஒன்று இறைவனாக இருக்க முடியுமா? இப்போது நன்கு சிந்தனை செய்து சொல்லுங்கள்.

எனவே இறைவனை ஒரு போதும் மனிதர்கள் கண்களால் பார்க்க முடியாது. இப்போது இறைவனைக்காட்டுங்கள் கண்களால் பார்த்து ஏற்றக்கொள் கிறோம். என்று சொல்வதே அறிவார்த்தமான வாதமல்ல என்பதை புரிந்து கொண்டிருப்பீர்கள் அறிவில் குறைந்தவர்களின் பேச்சாகவே இது இருக்க முடியும்;.இதர புலன்கள் சம்பந்தப்பட்ட நிலைகளும் இதைப்போன்றுதான் இருக்கும். மனிதனுக்குக் கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு புலனின் சக்தியும் வரையறைக்குள் உட்பட்டிருப்பதையே பார்க்க முடியும் ஒரு புலனின் செயலை மற்றொரு புலன் செய்ய முடியாது கண்ணால் தான் பார்க்க முடியும் காதால் பார்க்க முடியாது. காதால் ஒலிகளைக் கேட்க முடியும் கண்ணால் கேட்க முடியாது. பார்ப்பதற்கு இருப்பதுபோல் கேட்பதற்கும் சில நிபந்தனைகள் இருக்கின்றன. அந்த நிபந்தனைகள் நிறைவு பெற்றால் மட்டுமே கேட்க முடியும் ஆக மனிதனுக்குக் கொடுக்கப் பட்டுள்ள புலன்களைக் கொண்டு ஒரு பொருளை அறிந்து கொள்வதாக இருந்தால் அதற்குறிய நிபந்தனைகள் நிறைவேறியாக வேண்டும் இல்லையென்றால் அறிந்து கொள்ள முடியாது.

பெற்ற தாயையும் தந்தையையும் மனிதன் தனது புலன்களைக் கொண்டு அறிந்து முடியாமல் போனதறகுக் காரணம். அந்தச் சம்பவம் இடம்பெறும்போது இவனது புலன்கள் இருக்கவில்லை. இவனே இருக்கவில்லையே. இவனது புலன்கள் எப்படி இருந்திருக்க முடியும்? ஊரை நம்பித் தாயையும் தாயை நம்பித் தந்தையையும் அறிந்து கொள்ளும் நிர்பந்தமான ஒரு நிலைக்கு மனிதன் தள்ளப்படுகிறான். இது மனிதனுடைய பலகீனமான நிலை!இந்த நிலையுடைய மனிதன் ஊரை நம்பித் தாயை ஏற்றுக்கொண்டது போல். தாயை நம்பித் தந்தையை ஏற்றுக்கொண்டது போல். இறைத் தூதர்களை நம்பி இறைவனை ஏன் ஏற்றுக்கொள்ளக் கூடாதா? இதுவே நமது கேள்வி. சம்பவத்தோடு சம்பந்தப் பட்டிருப்பதால் தந்தையைப் பற்றித் தாய்க்குத் தெரிந்திருக்கிறது. இதேபோல் இறைவனுடன் வஹி என்கிற இறைச் செய்தி மூலமாக தொடர்புடைய இறைத் தூதர்கள் இறைவைனைப் பற்றி அறிந்திருப்பதில் நாம் வியப்படைய என்ன இருக்கிறது? சிந்தனையுடையோர் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும்.

தொடரும் இன்ஷா அல்லாஹ்

Al Fatiha